பிரேசில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது.
பிரேசில் சில கட்டுப்பாடுகளுடன் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரேசில் சுகாதார கண்காணிப்பு மையமானது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவாக்சின் தடுப்பூசி 40 லட்சம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.