தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ” கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். வியாபாரிகள் தடுப்பூசி போடாவிட்டால் அனுமதி மார்க்கெட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று ககன் தீப்சிங்பேடி தெரிவித்தார்.