Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தேமுதிக வரவேற்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் ம. க ஸ்டாலின் அவர்களும் பிளஸ் டூ தேர்வை ரத்து செய்து தெளிவான முடிவை எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது என்று ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |