இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டு வீரர்கள் மறுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், வீரர்கள் கையெழுத்திடுவதற்கான கால கெடு , கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் புதிய ஒப்பந்தத்தின்படி ,வெளிநாட்டு வீரர்களுக்கு தரும் ஊதியத்தை விட, எங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியமே அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் நாட்டுக்காக விளையாடுவதில் , நாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும் ,இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், வருகின்ற இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதற்கு தயாராக இருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே புதிய ஒப்பந்தத்திற்கு எதிராக ,வீரர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதியாக தெரிவித்துள்ளது.