பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இயற்கையை பாதுகாக்காமல் விட்டால் அதற்குரிய விலையை உலகம் கொடுக்க வேண்டிவரும் என்று கூறியிருக்கிறார்.
உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பேசுகையில், புவி வெப்பமயமாதலால் உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்படைந்துள்ளது. எனினும் நீர் தேவைக்காக பனிப்பாறைகளை நம்பியுள்ள நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எங்களது 80 சதவீத நீர் தேவை பனிப்பாறைகளை நம்பிதான் உள்ளது. ஆனால் பனிப்பாறைகள் விரைவாக உருக தொடங்கியுள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் நீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். எனவே இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு, பாகிஸ்தான் 10 பில்லியன் மரம் நடுவதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போது வரை, ஒரு பில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கிறது. மேலும் வரும் மூன்று வருடங்களுக்குள் மீதமுள்ள 9 பில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.