Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…. SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவததாகவும்,  மாதம் நான்கு முறைக்கு மேல்  ஏடிஎம்மிலோ அல்லது வங்கி கிளையிலோ பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காசோலையை பொறுத்தவரை 10 லீஃப் வரை உள்ள செக் புக் பரிவர்த்தனைக்கு பணம் கிடையாது. அதை தாண்டினால் ரூபாய் 40 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல 25 லீஃப்பை தாண்டினால் ரூபாய் 75 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த  வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |