Categories
உலக செய்திகள்

அவர் உயிருடன் இருக்கிறார்..! சமீப காலங்களாக பரவி வந்த தகவல்… ஐ.நா. சபை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

சமீப காலங்களாக உடல்நலக்குறைவால் அல்-ஜவாகிரி இறந்துவிட்டதாக வெளியான தகவல்களை அல்-கொய்தா அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைவராக பொறுப்பேற்ற அய்மான் அல்-ஜவாகிரி என்பவர் அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததால், அவரை கொல்வோம் என்று அமெரிக்கா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அய்மான் அல்-ஜவாகிரி சமீப காலத்தில் உடல்நல பாதிப்பால் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அல்-கொய்தா அமைப்பு அவருடைய இறப்பை உறுதி செய்யவில்லை.

இதனால் அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா ? அல்லது உயிருடன் உள்ளாரா ?என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் ஐ.நா. சபை அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா. சபை இதுகுறித்து தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கூறியிருப்பது யாதெனில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பகுதியில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் வசித்து வருவதாகவும், அதில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாகிரியும் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் பயங்கரவாதிகளின் பிரச்சார வெளியீடுகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை கூறியுள்ளது. மேலும் உடல்நலக்குறைவால் அல்-ஜவாகிரி இறந்துவிட்டதாக கூறப்படும் தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறிய ஐ.நா. சபை தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் அல்-கொய்தா அமைப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய துணைக்கண்டத்தின் அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில நாடுகள் தலிபான், அல்-கொய்தா தலைவர்களின் உரையாடல்களை இடைமறித்து கேட்டதாகவும், தற்போது அவை குறைந்துள்ளதாகவும் ஐ.நா. சபை கூறியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஹெல் மந்த், காந்தஹார், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருவதாக ஐ.நா. சபை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |