கும்பம் ராசி அன்பர்களே.! மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
இன்று குடும்ப விவகாரத்தில் தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை கடனாகக் கொடுக்க வேண்டாம். நீங்களும் கடனாக வாங்க வேண்டாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் கொஞ்சம் நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும். தந்தையிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனும் காத்திருக்கின்றது.
இன்று காதலில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சந்தோஷத்தைத் தரும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு இன்றைய நாள் தைரியம் கூடும். பெற்றோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். பெற்றோர்கள் சொல்கின்ற வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள். இங்கு முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்யுங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் அடைய முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் பழுப்பு