இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி , லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில், 378 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடியாக விளையாடி (200 ரன்கள் )இரட்டை சதம் அடித்த விளாசினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101.1 ஓவர்களில் , 275 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், அபாரமாக விளையாடி 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 103 ரன்களில் கூடுதலாக பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 62 ரன்களை எடுத்திருந்தது.
165 ரன்களுடன் நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் 5 ம் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை கைப்பற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் ரன்களை குவித்தது . இறுதியாக 52.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. இதனால் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிவான் கான்வே அறிவிக்கப்பட்டார். இரு அணிகளும் மோதிக் கொள்ளும், 2 வது டெஸ்ட் போட்டி வருகிற 10 ம் தேதி பெர்மிங்காமில் நடைபெற உள்ளது.