தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக், சலூன் கடைகள், தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.