தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது.
மேலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் இன்று முதல் செயல்படலாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.