தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை கடைகள், பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காலத்தில் வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படும் வாடகை வாகனங்கள், வாடகை டாக்சிகள், ஆட்டோக்கள் இ -பதிவுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.