Categories
கிரிக்கெட் விளையாட்டு

அறிமுகமான போட்டியிலேயே 7 மாசம் …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒல்லி ராபின்சன் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  .

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது  டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளது . அணியின் அறிமுக வீரரான டேவான் கான்வே ,200 ரன்களை அடித்து விளாசி  அறிமுகமான போட்டியிலேயே அதிரடி காட்டினார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .  அவர்  பந்துவீச்சில் ஸ்விங் ,பவுன்சரை  சிறப்பாக வீசி அனைவரையும் வியக்க வைத்தார். இதனால்  சமூக வலைதளத்தில்  ஒல்லி ராபின்சனை குறித்து ரசிகர்கள் , இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் என்று புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்தப் பாராட்டு, புகழ்ச்சிகள்   அன்றைய தினம் மாலை வரை கூட நிலைத்து நிற்கவில்லை. இதற்கு காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போட்ட டுவீட்தான், இவருக்கு எதிராக மாறியது.

8 வருடங்களுக்கு முன் போட்ட சில டுவீட்டுகளில் இனவெறியை தூண்டும் வகையிலும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் அந்தக் டுவீட்டில்  பதிவு செய்திருந்தார். இதனால் இவரை பாராட்டி புகழ்ந்து பேசிய ரசிகர்கள், இவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தன. அதோடு அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ராபின்சன் கூறிய விளக்கத்தை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்து விட்டது. அதோடு இவர் போட்ட டுவீட் உறுதி செய்யப்பட்டதால் , அவருடைய மன்னிப்பை நிராகரித்து  அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதோடு  7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட, அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |