நம்மில் சிலருக்கு பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். இவற்றை சேர்த்து வைப்பதால் பல சன்மானமும் கிடைக்கிறது. அதன்படி உங்களிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதனை சரியான இடத்தில் கொடுத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு உங்களிடம் பழைய அரியவகை ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பணம் சம்பாதிப்பதற்கு எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. அதனை ஆன்லைன் வலைத்தளம் மூலமாகவே பெறலாம்.
அதன்படி உங்களிடம் பழைய ஐந்து ரூபாய் நோட்டு இருந்தால் அதனைக் கொடுத்து ஆன்லைன் மூலம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இருக்க வேண்டும். அதனைப்போலவே அதில் 786 என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த ரூபாய் நோட்டை நீங்கள் ஆன்லைனில் ஏலம் விடலாம். அதற்கான ஏலத்தை நடத்தும் பிரத்தியேகமான ஆன்லைன் வலைத்தளங்கள் உள்ளன.
coinbazzar வெப்சைட்டில் நீங்கள் இந்த ரூபாய் நோட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். இந்த வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்து, ரூபாய் நோட்டின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும்.