Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு கொடுத்த விஷம்… தாய்க்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கான் கொட்டாய் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா, பவித்ரா என்ற இரண்டு மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தம்மாள் தனது குழந்தைகளான காவியா மற்றும் தனுஷுக்கு விஷம் கொடுத்துள்ளார். அதன்பின் முத்தம்மாளும் திடீரென தூக்கிட்டு தற்கொலை  செய்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தம்மாளின் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |