தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையிலான, விவசாய சங்கத்தினர் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் வேளாண் சட்ட நகல்களில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், வேளாண்மை சட்டங்கள் மத்திய அரசாங்கம் திரும்பப் பெறவில்லை என்றால் கொரோனா காலம் முடிந்தபின் எல்லா விவசாயிகளும் ஒன்று சேர்ந்து தர்ணாவில் ஈடுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.