முண்ணணி நடிகை அஞ்சலி திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி. அதன் பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் இரண்டு படங்கள் கன்னடத்தில் ஒரு படத்தை அஞ்சலி கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி தனக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்து மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவருக்கு ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அவர் சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலி தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.