இந்தியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ரஷ்யா தடுப்பூசிக்கான தொழில்நுட்ப விவரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவுள்ளது. மேலும் 66 நாடுகளுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை விற்பனை செய்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சினுடன் ஒப்பிடும்போது ஸ்புட்னிக் வி 91.6% மிகவும் திறனுடையது.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தடுப்பூசிகான பற்றாக்குறையைப் போக்குவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. அதன்படி இந்திய சீரம் அமைப்பானது ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய டி.சி.ஜி.ஐ என்ற அமைப்பிடம் அனுமதி கோரியது. இதனையடுத்து டி.சி.ஜி.ஐ இந்திய சீரம் நிறுவனத்திற்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் கழித்து ரஷ்யாவில் இருக்கும் உரிமம் பெற்ற நகரான ஹடாப்சரில் வைத்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்படும். இதனை ரஷ்யாவின் அதிபரான புதின் சர்வதேச செய்தியாளர்ளிடம் கூறியுள்ளார்.