Categories
உலக செய்திகள்

3 -17 வயது குழந்தைகளுக்கான…. தடுப்பூசிக்கு சீனா அங்கீகாரம்…..!!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலும்  18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனமான சைனோவேக் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு “கொரோனா வேக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன அரசு அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Categories

Tech |