Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எல்லாமே சொல்லி கொடுக்காங்க… சிறப்பு சிகிச்சை மையம்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

புதிதாக சிறப்பு சிகிக்சை மையம் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் மனையின் சித்த மருத்துவ பிரிவு சார்பாக நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மையம் தொடங்கப்பட்டு தற்போது 232 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 194 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 38 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு காலை வேளையில் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், எட்டு வடிவ நடை பயிற்சி, உடற்பயிற்சிகள், மஞ்சள் பொடி, மூலிகை தேநீர், வர்மம், கைவிரல்களால் நோய்களை குணப்படுத்தக்கூடிய முத்திரை பயிற்சிகள் மற்றும் கபசுர குடிநீர் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

இதனை அடுத்து மாலையில் சுவையின்மை குறைவைப் போக்க ஓம பொட்டலத்தில் தேன் கலந்த ஆரோக்கிய பானத்தை மூன்று வேளையும், உணவு நெல்லிச்சாறு போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களுக்கு நெல்லிக்காய் லேகியம் மற்றும் உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரணம் மாத்திரை போன்றவற்றை வழங்கி அவர்களை அனுப்பி வைக்கிறோம் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |