விண்மீன் வெடித்து சிதறியதால் காமா கதிர் வெளிப்பட்டுள்ளது.
சூப்பர் நோவா என்றழைக்கப்படும் விண்மீன் வெடிப்பு நிகழும்போது ஏதேனும் ஒரு நட்சத்திரம் இறந்து கருந்துளையாக மாறும். அப்போது GRB 190829A என்று அழைக்கப்படும் காமா கதிர் வெடிக்க தொடங்கும். இதனை ஜெர்மனி வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் போது அறிவியலாளர்கள், ஆப்பிரிக்க நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஆற்றல் வசதி கொண்ட தொலைநோக்கியின் மூலம் காமா கதிர் வெடிப்பை படம் பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த காமா கதிர் வெடிப்பு பூமியிலிருந்து ஒரு பில்லியன் ஆண்டுகள் தொலைதூரத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.