Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்க போட்டுட்டோம்…. நீங்க போட்டீங்களா…? – ஏ.ஆர் ரஹ்மான் டுவீட்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மகனுடன் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும், நாங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டோம் நீங்கள் செலுத்தி விட்டீர்களா? என ட்விட் செய்துள்ளார். மேலும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியே சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |