Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விதி மீறிய இந்த மாவட்டத்தில்…. 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதனால் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகின்ற 14 ஆம் தேதி வரை அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், நகராட்சி ஆணையர் கமலா, தாசில்தார் தெய்வநாயகி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரியகடைத்தெரு, மேலராஜவீதி, கீழப்பாலம் ஆகிய பகுதிகளில் அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டுவந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் கடை வைத்து நடத்திய உரிமையாளர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |