உலகளவில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடை ஏற்கனவே அமல் படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு பாதிப்பு 4,09,368 ஆகவும், உயிரிழப்பு 20,809 ஆகவும், சிகிச்சை பெறுபவர்கள் 12,899 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.