Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் கொடூரம்.. சாலையோரத்தில் குண்டு வெடிப்பு.. 11 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மக்கள் பலர் பலியாகிறார்கள். எனவே அமெரிக்க அரசின் தலைமையில், கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை வெளியேற்ற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அமைதிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒருபுறம் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற அனைத்து மக்களும்  பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பாத்கி என்ற மாகாணத்தில் இருக்கும் அப்கமாரி மாவட்டத்தில் அமைந்துள்ள சலாங் என்ற கிராமத்தின் சாலையோரத்தில் ஒரு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையறியாத மக்கள் அந்த வழியாக சென்ற போது திடீரென்று வெடிகுண்டு வெடித்து விட்டது.

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 11 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள் தான் நடத்தியிருப்பார்கள் என்று மாவட்ட கவர்னர் குதாதத் தயீப் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தாக்குதலுக்கு தலீபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.

மேலும் தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நேற்று மட்டும் 10 மாகாணங்களில், நடந்துள்ளதாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |