தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தத உடனே அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் நலப்பணிகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் மக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது. சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமானக் கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.