Categories
உலக செய்திகள்

செய்தியாளருக்கே இந்த நிலைமையா…? பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பெண் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 54 வது ஆண்டுக்கான நினைவு நாளையொட்டி ஷேயிக் ஜாரா என்னும் நாட்டில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தினை பற்றி செய்தி சேகரிப்பதற்காக அல்ஜசீரா நிறுவனத்திலிருந்து வந்த பெண்ணை காவல்துறையினர் அடாவடித்தனமாக தூக்கி சென்றனர்.

மேலும் அப்பெண் செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா உட்பட பல கருவிகளையும் காவல்துறையினர் தூக்கிப்போட்டு உடைத்துள்ளனர். இதனையடுத்து செய்தி சேகரிக்க பெண்ணிற்கு துணையாக வந்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |