‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தனது குழந்தையின் முதலாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் மாயநதி, லூசிபர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு லிடியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்கு இஷா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று டொவினோ தாமஸ் தனது மகன் தஹானின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். மேலும் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.