மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பழம்பெரும் ஹிந்தி நடிகரான திலீப்குமார் (வயது98) அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகையால் அவர் மாதா மாதம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் திடீரென மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமாகி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.