Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறந்தது.. என்ன பெயர் சூட்டப்பட்டது..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக  அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்காவை சேர்ந்த நடிகையான மேகனை காதலித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் வருடத்தில் அரச முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வாழ விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர்.

எனவே, பிரிட்டனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். தற்போது இருவரும் கலிபோர்னியாவில் வசிக்கும் நிலையில், மேகன் கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரசவத்திற்காக, Santa Barbara Cottage மருத்துவமனையில் மேகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 4 ஆம் தேதி அன்று, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு Lilibet Diana என்று பெயர் சூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |