உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வருகிற 18-ஆம் தேதி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், பேட்டி ஒன்றில் கூறும்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு 3 போட்டிகளாக இருந்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், அடுத்த 2 டெஸ்டில் சரிவை சமன் செய்து, வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும். இந்தப் போட்டிக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடுவதால் இந்திய அணியை விட அவர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள். பேட்டிங்கை ஒப்பிட்டு பார்த்தால் , நியூசிலாந்து அணியை விட இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது.
தற்போது அணியில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அனுபவசாலியான மாறியுள்ளார். ரோகித் சர்மா , சுப்மன் கில் இருவரும் இணைந்து இங்கிலாந்தில், தொடக்க வீரர்களாக விளையாடியதில்லை . இங்கிலாந்து பந்துகள் ஆரம்பத்திலேயே நன்றாக ஸ்விங் ஆகும் என்பது , அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதோடு அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சீக்கிரமாக அவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது போட்டியில் காலையில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். மதிய நேரத்தில் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை திரட்ட முடியும். இதன் பின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். எனவே ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டால், நிச்சயம் வெற்றிகரமாக செயல்பட முடியும் “,என்று அவர் கூறினார்.