ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் உதவியால் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.இந்த சாதனையை அங்கிருந்த அனைவரும் தங்களது போனில் புகைப்படம் எடுத்தனர். இது பற்றி அவர் கூறும் போது, இதனை செய்ய சற்று கடினமாக இருந்ததாகவும், ஆனால் செய்து முடித்துவிட்டதாகவும் ஜியோர்கி உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார். ஒரே விரலில் மிக கனமான இந்த படகை இழுத்த அவரது சாதனையை அங்கீகரித்துள்ள ஜார்ஜியன் சாதனைகள் சம்மேளனம், இதுகுறித்து கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை அணுகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.