Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் நாளொன்றுக்கு 50 டோக்கன் என ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் வழங்கிய ஆவண பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இயன்றவரை உடனடியாக வழங்கிய பொதுமக்கள் திரும்பவும் அலுவலகம் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |