Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்…. அலைமோதும் கூட்டம்….!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதனால் சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் டெல்லி திரும்பி வருவதால், ஆனந்த் விகாரி மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |