இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா பரவலை மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாம் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் கால்பந்து தொடரில் தன் குரலால் உயிர் கொடுத்த கொரோனாவால் காலமானார். சென்னை லீக் போட்டிகளின் போது இவர் கொடுக்கும் அறிவிப்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 20 ஆண்டுகளாக போட்டி அறிவிப்பாளராக பணியாற்றி வந்த மனோ, டிவிஷன் போட்டிகளில் 10 ஆண்டுகள் டான் பாஸ்கோ அணி கோல் கீப்பராக விளையாடியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.