தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் உடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories