Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு தன்மை… ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.  தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷில்டு தடுப்பூசியின் கோவாக்சினை விட கூடுதல் நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி இரண்டுமே 2 டோஸ் போட்ட பிறகு சிறந்த பலன்களை கொடுப்பதாகவும், இருப்பினும் கோவிஷில்டு தடுப்பூசியில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு கூறுகள் கூடுதலாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Categories

Tech |