Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தடுப்பூசி போட வேண்டும்… அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவு…!!!

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி, ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் இந்த தடுப்பூசி வழக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அனுமதி அளிக்காத காரணத்தினால் அதை ஏற்க முடியாது என அமெரிக்க அரசு கூறிய நிலையில், கல்வி நிறுவனங்கள் மீண்டும் தடுப்பூசி போட உத்தரவிட்டுள்ளன.

Categories

Tech |