சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பரிகம் கிராமத்தில் சாராயம் காய்ச்ச வீட்டில் ஊறல் போட்டு வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விவசாயி கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்து அவரது வீட்டில் இருந்த சாராய ஊறல் மற்றும் பாத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.