தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே 3000 காலி பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா முடிவுக்கு வந்தால் மட்டுமே பள்ளிகள் திறக்க முடியும். அதற்கு முன்பாகவே காலி பணி இடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் விவரங்களை சேகரித்து நாளுக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.