Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூக்கு வழியில் மருந்து ஏற்றப்படும்… மோடி பரபரப்பு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போட செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் பலனாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது நேரலையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் மேலும் 3 புதிய தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும், 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |