Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!’.. டோக்கியோ ஒலிம்பிக்கின் மூத்த அதிகாரி தற்கொலை.. தொடரும் விசாரணை..!!

ஜப்பானில் கடந்த 2020 ஆம் வருடம் டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் கடந்த 2020-ம் வருட டோக்கியோ ஒலிம்பிக்கின் மூத்த அதிகாரியான Yasushi Moriya(52). இவர் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவில் நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் வருடத்தில் தற்கொலை சம்பவங்கள் 20,919 ஆக பதிவு செய்யப்பட்டது. இது அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும், 3.7% அதிகம். மேலும் இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை அதிகரிப்பதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம் என்று நிபுணர்களும், விஞ்ஞானிகளும் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |