கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. வரும்காலத்தில் தடுப்பூசிகள் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்று கூறினார். இதன்மூலம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதில் பிரச்னை இருக்காது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும், ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் உரையில் தெரிவித்துள்ளார்.