Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1/2 கிலோ மீட்டர் நடந்த யானை…. பின்னோக்கி சென்ற வாகன டிரைவர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

சாலையில் 1/2 கிலோ மீட்டர் தூரம் யானை முன்னோக்கி வந்ததால் வாகன டிரைவர் பின்னோக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று வெளியேறி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த லாரி யானை சாலையில் நின்றதால் டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டார். இதேபோன்று பின்னால் வரக்கூடிய வாகனங்களும் யானை சாலையில் நிற்பதனால் லாரியின் பின் நின்றுள்ளனர்.

இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த யானை திடீரென்று லாரியை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கியதால் லாரி டிரைவர் வண்டியை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனால் அந்த யானை 1/2 கிலோ மீட்டர் தூரம் வரை மெதுவாக நடந்து வந்ததால் டிரைவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாகனங்களை பின்னோக்கி எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து 1 ஒரு மணி நேரம் கடந்து யானை அங்கே இருந்து தானாக வனப்பகுதிக்கு சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிரைவர்கள் வாகனங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

Categories

Tech |