பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆபத்தானவை என்று தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேனான டூ ப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பாக , இரண்டு டி20 லீக் போட்டிகள் மட்டும் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் டூ ப்ளசிஸ் கூறும்போது, “இந்த டி20 லீக் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது. அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு பல நெருக்கடியை கொடுக்கும்.
முதல் முதலாக வெஸ்ட் இண்டீஸில்தான் டி20 லீக் போட்டிகள் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால்தான் வெஸ்ட் இண்டீஸ் அணி திறமையான வீரர்களை இழந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவிலும், இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக டூ ப்ளசிஸ் விளையாடி வருவது, குறிப்பிடத்தக்கது.