Categories
தேசிய செய்திகள்

BREAKING: நவம்பர் மாதம் வரை இலவசம்… பிரதமர் மோடி மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நவம்பர் மாதம் வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசம் உணவு தானியம் வினியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |