Categories
தேசிய செய்திகள்

திருமணத்தின் போது… மதுபோதையில் மணமகளிடம் ரகளை செய்த மணமகன்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து மணமகளை நடனம் ஆடும்படி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மணமகள் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தான் அவர் குடித்துவிட்டு வந்துள்ளது அனைவருக்கும் தெரியவந்தது. பின்னர் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். கொடுத்த வரதட்சனை மற்றும் பரிசுப் பொருள்களை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். மது அருந்துதல் உடல் நலத்தையும், இல்லற வாழ்வையும் கெடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Categories

Tech |