கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக சுவிட்சர்லாந்து அரசு ட்ராம், ரெயில் போன்ற போக்குவரத்தை அந்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசு வரும் 2050-ஆம் ஆண்டில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்த ஏதுவாக பொது போக்குவரத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்க முடிவெடுத்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக இந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுவிஸ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பொது போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்தில் வாழும் 80 சதவீத மக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களையே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.