இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில், கொரோனாவை ஒழிக்க முக்கிய ஆயுதம் தடுப்பூசி ஒன்றே ஆகும். மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்று கூறினார். கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேலான வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தீபாவளி வரை உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.