தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் கரமாக தொற்று பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று 19 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 30 ஆயிரத்து 31,360 பேர் கொரோனாவுக்கு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். வேணும் 357 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா மரணமும் 400 க்கு கீழே இறங்கி உள்ளது.